வங்கிகள் இணைப்பை கண்டித்து நாளை மறுநாள் வங்கிகள் ஸ்டிரைக்...அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தகவல்

புதுடெல்லி: வங்கிகள் இணைப்பு அறிவிப்பை கண்டித்து, நாளை மறுநாள் வங்கிகள் வேலை நிறுத்தம் நடக்கவுள்ளதாக, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் இணைப்பை கண்டித்து அகில இந்திய வங்கி  ஊழியர் சங்கம், இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் ஆகியவை, வரும் 22ம் தேதி (நாளை மறுநாள்) வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.இதுகுறித்து, பாங்க் ஆப்  மகாராஸ்ட்ரா நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், 'அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், பல்வேறு கோரிக்கைகள் மற்றும் பிரச்னைகள் குறித்து வரும் 22ம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த  வேலைநிறுத்தத்தால், வங்கி சேவைகள் பாதிக்கப்படாது' என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, எஸ்பிஐ வங்கி வெளியிட்ட அறிக்கையில், 'வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் தொழிற்சங்கங்களில் எங்கள் வங்கி ஊழியர்களின்  உறுப்பினர் எண்ணிக்கை மிகக் குறைவு. எனவே வங்கியின் செயல்பாட்டில்  வேலைநிறுத்தத்தின்  தாக்கம்  குறைவாக இருக்கும். இருந்தாலும், வேலைநிறுத்தத்தின் காரணமாக  ஏற்படும் தாக்கத்தை தற்போது மதிப்பிட முடியாது' என்று குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், '10 பொதுத்துறை வங்கிகளை நான்கு வங்கிகளாக இணைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு தேவையற்றது. கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி, மத்திய அரசு 10  பொதுத்துறை வங்கிகளை நான்காக இணைப்பதற்கான திட்டத்தை அறிவித்தது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாக கூறப்படுகிறது. வங்கிகள் இணைப்பை கண்டித்து நாளை மறுநாள்  (அக். 22) நாடு முழுவதும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


Popular posts
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோணா நோய்த் தொற்று கட்டுபடுத்துதல் பற்றிய சிறப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது
Image
திருவண்ணாமலையில் நகராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக நாள்தோறும் 2000 நபர்களுக்கு மூன்று வேளை உணவு அளிக்கப்படுகிறது.
Image
திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி. வெ. கணேசன் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார்
Image
தேனி மாவட்டத்தில் அரசு கண்மாய்கள் ஆக்கிரமிப்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கால்நடை உரிமையாளர்கள் கோரிக்கை
Image
மராட்டிய மாநிலம் மும்பை ஜோகேஷ்வரி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் நேற்று இரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.