சதுரகிரி மலைக்கு செல்வது ஆபத்து; 2வது நாளாக தடை!

மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலிற்கு விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் நேரடியாக செல்லலாம்.


இந்த மலைப் பகுதியில் மகாலிங்கம், சுந்தரமூர்த்தி லிங்கம், சந்தன மகாலிங்கம், இரட்டை லிங்கம், காட்டு லிங்கம் ஆகிய கோயில்கள் அமைந்துள்ளன. ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, சிவராத்திரி நாளையொட்டி சதுரகிரி மகாலிங்கம் கோயிலிற்கு ஏராளமானோர் வந்து செல்வர்.


இந்த மலைப் பகுதிகளில் அபூர்வ மூலிகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இங்கு தங்கி மக்கள் மருத்துவமும் பார்த்து வருகின்றனர். இந்த சூழலில் வரும் 27ஆம் தேதி வரை பிரதோஷம், அமாவாசை வழிபாட்டிற்காக சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பெய்த கனமழையால் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்தது. நேற்று இரவு பல மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.


இதனால் சதுரகிரி மலைக்கு செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை, வழுக்குப் பாறை உள்ளிட்ட ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்தது. எனவே 2வது நாளாக பக்தர்கள் சதுரகிரி மலைக்கு செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.


Popular posts
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோணா நோய்த் தொற்று கட்டுபடுத்துதல் பற்றிய சிறப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது
Image
திருவண்ணாமலையில் நகராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக நாள்தோறும் 2000 நபர்களுக்கு மூன்று வேளை உணவு அளிக்கப்படுகிறது.
Image
திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி. வெ. கணேசன் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார்
Image
தேனி மாவட்டத்தில் அரசு கண்மாய்கள் ஆக்கிரமிப்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கால்நடை உரிமையாளர்கள் கோரிக்கை
Image
மராட்டிய மாநிலம் மும்பை ஜோகேஷ்வரி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் நேற்று இரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.