ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் கைக்குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டு உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ரயில் நிலையம் அருகே பெண்(30) ஒருவர் இன்று அதிகாலை தனது கைக்குழந்தை உடன் நடந்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பெங்களூருவை நோக்கி செல்லும் மயிலாடுதுறை விரைவு ரயில் முன்பு திடீரென பாய்ந்து தற்கொலைக்கு
இதில் பெண் குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. ஆனால் அப்பெண் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக் கண்ட பொதுமக்கள் உடனே ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் கைக்குழந்தையை மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட பெண் யார் என்று இதுவரை தெரியவில்லை.