தெலங்கானா என்கவுன்டர் சம்பவத்தில், குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டதில் சட்டம் தன் கடைமையைச் செய்துள்ளது என்று சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்துள்ளார்.
திசையெங்கும் இன்று தெலங்கானாவும் என்கவுன்டரும்தான் தேசியச் செய்தி மட்டுமல்ல.. தலைப்புச் செய்தியே.
அந்த சம்பவம் நடந்தது எப்படி என்பது குறித்து இன்று பிற்பகலில், சம்பவ இடத்திலேயே செய்தியாளர்களை சந்தித்தார் சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார்.
அப்போது அவர் சம்பவம் பற்றி பல்வேறு விஷயங்களை விளக்கினார்.
பெண் மருத்துவரின் செல்போனை தாங்கள் மறைத்து வைத்திருப்பதாகவும், அதனை எடுத்துத் தருவதாகவும் கூறியதால் குற்றம்சாட்டப்பட்டவர்களை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்ததாகக் கூறினார்.