இன்று அதிகாலை, நான்கு பேரையும், சம்பவ இடத்தில் குற்றத்தை எப்படி செய்தார்கள் என்று நடித்துக் காட்டும்படி சொன்னோம். அப்போது திடீரென சென்னகேசவலு, முகமது ஆரிஃப் ஆகியோர் எங்களது கையில் இருந்து துப்பாக்கியைப் பிடுங்கி எங்களை நோக்கி சுடத் தொடங்கினர். முகமது ஆரிஃப்தான் எங்களை நோக்கி சுட்டார்.
நான்கு பேரையும் பாதுகாப்பாகவே அழைத்து வந்தோம். எங்களுடன் 10 காவலர்கள் இருந்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக எங்களது துப்பாக்கியை அவர்கள் பறித்துவிட்டனர். முதலில் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினோம்
ஒரு கட்டத்தில் போலீஸார் மீது நான்கு பேரும் சேர்ந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் எஸ்.ஐ. வெங்கடேஷ் உள்ளிட்ட இரண்டு எஸ்.ஐ.க்கள் காயமடைந்தனர்.]