சென்னை,
குடிமைப்பணி அலுவலர்களுக்கான கிரிக்கெட் போட்டியை சென்னை மெரினாவில் முதல் அமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது, பேட்டிங் செய்து அதிகாரிகளை முதல் அமைச்சர் உற்சாகப்படுத்தினார்.
அமைச்சர் ஜெயக்குமார், டிஜிபி திரிபாதி ஆகியோர் வீசிய பந்தை லாவகமாக அடித்து முதல் அமைச்சர் பழனிசாமி அசத்தினார்.
பின்னர் பேசிய முதல் அமைச்சர் பழனிசாமி, உடல் ஆரோக்கியத்திற்கு விளையாட்டு மிக முக்கியம் விளையாட வயது தடையல்ல ” என்றார்.