ஈரான் - அமெரிக்கா போர்ப்பதற்றம் : தங்கம் விலை உச்சம் ; ரூபாய் மதிப்பு சரிவு
சென்னை

 

ஈரான் - அமெரிக்கா போர்ப்பதற்றம் காரணமாக உலக அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இதனால், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வைச் சந்தித்து வருகின்றன.

 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.512 உயர்ந்து ரூ.31,168-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 


22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.64 உயர்ந்து ரூ.3,896-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 3 நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரித்து புதிய உச்சத்தில் விற்கப்படுகிறது.

 

வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.1.30 உயர்ந்து ரூ.52.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 

நாட்டின் பங்குச்சந்தைகள் இன்று வீழ்ச்சியுடன் வர்த்தகமாகி வரும் நிலையில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் சரிந்திருக்கிறது.

 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 367 புள்ளிகள் சரிந்த நிலையில், 41 ஆயிரத்து 97 புள்ளிகளுடன் இன்றைய வர்த்தகத்தைத்  தொடங்கியது. முற்பகல் 11.30 மணியளவில், சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்து வர்த்தகமானது.

 

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும், 155 புள்ளிகள் சரிந்து, 12 ஆயிரத்து 70 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. இதுதவிர, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயும் மதிப்பும் வீழ்ச்சியடைந்திருக்கிறது. நேற்றைய மதிப்பை விட, இன்று, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 32 காசுகள் சரிந்து, 72 ரூபாய் 8 காசாக உள்ளது.


Popular posts
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோணா நோய்த் தொற்று கட்டுபடுத்துதல் பற்றிய சிறப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது
Image
திருவண்ணாமலையில் நகராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக நாள்தோறும் 2000 நபர்களுக்கு மூன்று வேளை உணவு அளிக்கப்படுகிறது.
Image
திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி. வெ. கணேசன் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார்
Image
தேனி மாவட்டத்தில் அரசு கண்மாய்கள் ஆக்கிரமிப்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கால்நடை உரிமையாளர்கள் கோரிக்கை
Image
மராட்டிய மாநிலம் மும்பை ஜோகேஷ்வரி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் நேற்று இரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.