எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கருப்பசாமிபாண்டியன் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார்

கருப்பசாமிபாண்டியன் நேற்று இரவு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அ.தி.மு.க.வில் மீண்டும் இணைந்தார்.


சென்னை,

அ.தி.மு.க.வில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரால் அடையாளம் காட்டப்பட்ட கருப்பசாமிபாண்டியன், தனது 25-வது வயதிலேயே 1977-ம் ஆண்டு நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். பின்னர், அவருக்கு கட்சியில் நெல்லை மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.



 




ஆலங்குளம், பாளையங்கோட்டை, தென்காசி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். கட்சியில் துணைப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்தார். இந்தநிலையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கட்சியை விட்டு விலகி தி.மு.க.வில் இணைந்தார்.

தி.மு.க.விலும் அவருக்கு நெல்லை மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர், தி.மு.க. தலைமையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, 2015-ம் ஆண்டு கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதனால் 2016-ம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

அ.தி.மு.க.வின் பின்னணியில் இருந்த சசிகலா, டி.டி.வி.தினகரனால் ஓரங்கட்டப்பட்டார். இந்தநிலையில், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. தலைமையை சசிகலா கைப்பற்றிய நேரத்தில், அக்கட்சியை விட்டு விலகி மீண்டும் 2018-ம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்தார்.

தற்போது, தி.மு.க.வை விட்டு விலகி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார்.


Popular posts
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோணா நோய்த் தொற்று கட்டுபடுத்துதல் பற்றிய சிறப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது
Image
திருவண்ணாமலையில் நகராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக நாள்தோறும் 2000 நபர்களுக்கு மூன்று வேளை உணவு அளிக்கப்படுகிறது.
Image
திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி. வெ. கணேசன் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார்
Image
தேனி மாவட்டத்தில் அரசு கண்மாய்கள் ஆக்கிரமிப்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கால்நடை உரிமையாளர்கள் கோரிக்கை
Image
மராட்டிய மாநிலம் மும்பை ஜோகேஷ்வரி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் நேற்று இரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.