முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவை தொடர்ந்து (இனிமேல் இலவச அழைப்புகள் கிடையாது என்று அறிவித்ததற்கு பின்னர்) பார்தி ஏர்டெல் மீதான வெறுப்புணர்ச்சி மேலோங்க தொடங்கியுள்ளது.
ரூ.45 எனும் கட்டாய ரீசார்ஜ் திட்டமானது அதற்கு "அடித்தளம்" போட ஏர்டெல் நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பு ஒன்று அதன் மேல் ஒரு "கட்டிடத்தையே" கட்டியுள்ளது என்று கூறலாம். ரூ.45 என்கிற கட்டாய ரீசார்ஜை தெடர்ந்து, ஏர்டெல் வாடிக்கையாளர்களின் கைகளில் இருந்து நெட்பிலிக்ஸ் சேவைக்கான இலவச அணுகல் பறிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் யாருக்கெல்லாம் நெட்பிலிக்ஸ் சேவைக்கான இலவச அணுகல் கிடைக்காது?
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் அல்லது ஏர்டெல் பிராட்பேண்ட் என அழைக்கப்படும் நிறுவனத்தின் பிராட்பேண்ட் திட்டங்களானது வழக்கமான டேட்டா மற்றும் வாய்ஸ் நன்மைகளை தவிர்த்து கூடுதல் நன்மைகளுக்காக நன்கு அறியப்படும் ஒரு சேவை ஆகும். தொழில்துறையில் உள்ள மற்ற பெரும்பாலான பிராட்பேண்ட் திட்டங்களானது டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகளின் மீது மட்டுமே கவனம் செலுத்த, ஏர்டெல் பிராட்பேண்ட்டோ தனது சந்தாதாரர்களுக்கு எப்டியெல்லாம் கூடுதல் நன்மைகளை வழங்கலாம் என்பதில் அதிக கவனம் செலுத்தியது.