துருவங்கள் 16 படம் புகழ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். தற்போதைக்கு டி 43 என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. தனுஷ், கார்த்திக் கூட்டணி சேரும் படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இது குறித்த தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
தனுஷ், ஜி.வி. பிரகாஷ்
தனுஷ், அனிருத் கூட்டணியை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் தான் தனுஷ், ஜி.வி. பிரகாஷ் கூட்டணி அமைந்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்திற்கு ஜி.வி. மிரட்டளாக இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அசுரன் போன்று டி 43 படத்திற்கும் இசை சும்மா தெறிக்கும் என்று நம்பப்படுகிறது.